Friday, February 16, 2007

கொக்கறுத்த கோமான்!

சிறுவயதில் படித்த பாடம்.... கந்தனுக்கு ஒரு அடைமொழியுண்டு.. கொக்கறுத்த கோமானென்று... சேவற் கொடியவனுடையது! திருமுருக கிருபானந்தவாரியார் அதிக விளக்கமளிக்கக் கூடும்...

தமிழ்ச் சமுதாயத்தின் உயிர் நாடி தணிகை வேலன்... அவனே இத்தேசத்தை எழுச்சி பெற செய்யப் போகும் ஊக்கமருந்து! உயிர்நாடி!

வெற்றிவேல்! வீரவேல்! தமிழ் மறவர்களில் வெற்றி வாசகம்! இமயத்தை இணைக்கும் ஈர்ப்புச் சக்தியவன்!

ஆம்! சக்தியின் உருவமும் அவனே!... பிரணவத்தின் பொருளவனே!.. அனைவரையும் காக்கும் ஆபத்தாண்டவன்... உண்மைப் பொருளவன்... அவனால் இச்சமுதாயத்தினை வீறுகொண்டு எழச் செய்யும் இனியதொரு முயற்சி!